தென்காசி மாவட்ட காவல் துறை உளவு பிரிவிற்கு கடையநல்லூர் பகுதியில் கத்தை கத்தையா கரன்சி நோடடுகளுடன் வாலிபர் ஒருவர் அட்டைக்குளம் பகுதியில் சுற்றி திரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது. எதிர்வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூர் அட்டைக்கு னத்தினில் ஏராளமான ஆடுகள் விற்vனைக்கு வந்துள்ன்ன.மதுரை திருப்பரங்குன்றம் தேனி பகுதிகளிலிருந்து ஆடுகள் மந்தை மந்தையாக விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கள்ள நோட்டுகளை எளிதாக மாற்றிவிடலாம் என்ற நிலையில் தென்காசி கன்னிமாரியம்மன் கோவில் தெருவைச் சார்ந்த நாகூர் மீரான் மகன் முகம்மது இஸ்மாயில் (37) என்ற நபர் அங்குமிங்கும் அலைவதை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன் சொக்கம் பட்டி உதவி ஆய்வாளர் வேல் பாண்டி தனிப்பிரிவு காவலர்கள். கடையநல்லூர் செய்ய துஅலி சொக்கம்பட்டி மருதுபாண்டி ஆகியோர் அடங்கிய குழுவினர் முகம்மது இஸ்மாயிலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவனிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரத்தையும் கைப் பற்றி விசாரணை செய்து அவனது வீட்டிலிருந்த கலர் ஜெராக்ஸ் மிஷினையும் கைப்பற்றி கைது செய்தனர். இதனால் கடையநல்லூர் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டு கடைகளில் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர் கடையநல்லூர் மற்றும் தென்காசி பகுதிகளில் கள்ள நோட்டு சப்ளையாயிருக்குமோ என்ற எண்ணத்தில் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்