
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த தெற்க்குபட்டு, கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள குறும்பட இயக்குனர் வைஜயந்தி மாலா என்பருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது, இந்த பங்களாவில் ராஜேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி காவலாளியாக வேலைசெய்து வருகிறார், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த பங்களாவில் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயன்று அங்கே எந்த பொருட்களும் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் சி.சி.டிவி கேமரா மற்றும் மின்சாதன பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர், சத்தம் கேட்டு ஓடிவந்த காவலாளி ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பிள்ளைகளை தாக்கிவிட்டு அவரது மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர், காவலாளியின் மனைவி, பிள்ளைகள் சத்தம் போடவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்..

பின்னர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவம் அறிந்து அங்கு சென்ற மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர், மாமல்லபுரம் எ.எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து கத்தி , செல்போன், மின்தாக்கி இயந்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர், விசாரணையில் கொள்ளையர்கள் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த தினேஷ் வயது 26, பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் வயது 20, மிர்துன் 20 இவர்களுக்கு துணையாக இருந்த சென்னையை சேர்ந்த சுதர்சனம் ஆகிய நான்குபேர் என்பது தெரிய வந்துள்ளது இவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன், உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, சரவணன் ஆகியோரை, சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.


