
உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் குறித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வுகளையும்செயல்படுத்தி வருகிறது
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை ரோட்டரி கிளப் ஆப் பிளாசம் அமைப்பு சார்பாக காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை கபசுர குடிநீர் முக கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் ஸ்ரீலட்சுமி பன்சிதர் தலைமையில் நடைபெற்றது.,
இந்நிகழ்ச்சியில் அண்ணாநகர் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் லில்லி கிரேஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காவலர்களுக்கு முகக் கவசம் சானிடைசர் கபசுர குடிநீர் நோய் எதிர்ப்புசக்தி மாத்திரைகளை வழங்கினார்.,
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 துணை ஆளுனர் தேவசேனா முரளி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சர்மிளா மாதவன், மனநல ஆலோசகர் ஷர்மிளாசிராஜ்,நீரு சத்யதேவ், மாலதி பெருமாள் ரோட்டரி சங்க செயலாளர் ஜெயந்தி கலைராஜன் மற்றும் ரோட்டரி மாவட்ட செய்தி தொடர்பாளர் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்….
மதுரை மாவட்ட செய்தியாளர்
வி காளமேகம்..


