
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ள மத்தியசேனையில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில், பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன், சீருடையில் மது அருந்தும் காட்சிகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவின.
பணியில் இருந்த அவர் சீருடையிலும், வாக்கி டாக்கியுடனும் பாரில் மது அருந்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோடீஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்