கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ம் தேதி நள்ளிரவில் காவிப்பொடி வீசிப்பட்டது. இதை அறிந்த பெரியாரின் ஆதரவாளர்கள் அப்பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கோவையின் பல்வேறு இடங்களில் திராவிட கழகத்தினர் பெரியார் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து பெரியார் சிலைகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த் நிலையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காவிப் பொடி வீசிய பாரத் சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் (வயது 21) என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவர் நீதிமன்ற காவலில் தற்போது சிறையில் உள்ள நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.