ஜவுளி கடை மற்றும் மளிகை கடைகளில் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த 3 இளைஞர்களை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

329

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கடைவீதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜவுளி கடை மற்றும் மளிகை கடைகளில் பணம், பொருட்கள் திருட்டு போனது சம்பந்தமாக கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் 28.07.2020 அன்று கந்தர்வகோட்டை பகுதியில் ரோந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.சுந்தரமூர்த்தி மற்றும் காவலர்கள் சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் செலவுக்கு பணம் இல்லாததால் 3 பேரும் கூட்டாக சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கூறினர். இதையடுத்து 3 இளைஞர்களையும் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here