
வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இப்பண்டிகையின் முக்கிய அம்சமே கூட்டு குர்பானி. குர்பானியின் போது தனி குடும்பமாகவோ, பல குடும்பங்கள் இணைந்து கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் தற்போது கோவையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், எவ்வாறு பக்ரீத் பண்டிகை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் போத்தனூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார பகுதியினை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர், கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு ஸ்டாலின் தெற்கு காவல்துறை ஆணையாளர் செட்ரிக் இமானுவேல், மாநகராட்சி உதவி ஆணையாளர் ரவி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். சமூக இடைவெளியை பின்பற்றி குருபானி கொடுப்பது குறித்தும், சிறப்பு தொழுகையை அவரவர் வீட்டிலேயே நடத்துவது உள்ளிட்ட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.