காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ரவுடியாக இருந்து தற்போது திருந்தி வாழ்ந்து வந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அஜய் என்ற இளைஞர் ரவுடி கும்பலுடன் இருந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக திருந்தி வாழ்ந்து வந்த நிலையில் தாரமங்கலம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது . முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.