
தேனி மாவட்டம் போடி நகர் 6வது வார்டு பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் இவர் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இவரை பலமுறை காவல்துறையினர் கைது செய்து எச்சரித்து விடுதலை செய்தனர். மீண்டும் தனது கைவரிசையை காட்டி வந்ததை அடுத்து முருகேசனை கையும் களவுமாக பிடிப்பதற்கு போடி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு முருகேசன் வீட்டை சுற்றிவளைத்து அங்கு காத்திருந்த போது போடி போலீஸாரால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் கஞ்சா வாங்க உள்ளே சென்றார். முருகேசனை கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர் பின்பு கூடையில் பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை துணை காவல் கண்காணிப்பாளரிடம் தனிப்படையினர் கைப்பற்றி போடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.முருகேசனை போல் இந்த பகுதியில் சிலர் இருப்பதாகவும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.