வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பலே திருடன் கைது…

240

வேலூர் மாவட்டம்
செய்தியாளர் டேவிட்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் எல்லைக்குட்பட்ட தாஸாயதம், ஜெய் இந்திராணி நகர், வீரசிவாஜி தெருவைச் சேர்ந்த விஜயகுமார்(44) S/O பழனி என்பவர் 23.07.2020 அன்று வீட்டை பூட்டி விட்டு வேலூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று நேற்று 28.07.2020அவர் குடியாத்தத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தார். இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சங்கர் அவர்களின் தலைமையில் தனிப்படையினர் அமைத்து வீட்டுக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர். இன்று 29.07.2020 வீட்டில் கொள்ளையடித்த பண்டல் தெரு, காக்காத்தோப்பு, பலமனேரி, சித்தூரை சேர்ந்த அருண்குமார் (26) S/O ஜோசப் என்பவனை காவல்துறையினர் கைது செய்து அவனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 15 சவரன் தங்க நகை,750 கிராம் வெள்ளி மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், குடியாத்தம் போஸ் பேட்டையில் உள்ள ஜோதி(45) S/O ராமலிங்கம் என்பவரின் மளிகைக் கடையிலும் இவன்கடையை உடைத்து கடையில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை திருடியது விசாரணையில் தெரியவந்தது. மேற்கொண்டு அவனிடம் 20,000 ரூபாயை ரொக்கத்தை பறிமுதல் செய்து கொள்ளையடித்தவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here