குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது

139

செங்கல்பட்டு, ஜுலை.31: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சலவாதி கிராமத்தை சேர்ந்த மாரி (எ) நண்டுமாரி வயது 55, த/பெ சடையன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கரசங்கால் கிராமம் அந்தோனியார் தெருவை சேர்ந்த விமல்ராஜ் வயது 28, த/பெ புஷ்பராஜ் ஆகிய இரண்டு பேரும் ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் ஏற்பட காரணமாக இருந்த மேற்படியான இருவர் மீதும், தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவர்களது குற்றச் செயலைக் கட்டுப்படுத்தும் விதமாக அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் முயற்ச்சியால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் பரிந்துரையின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றவியல் நடுவர் மேற்படியான நபர்களை தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நண்டுமாரி, விமல்ராஜ் ஆகிய இருவரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக போலிசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here