Home தமிழ்நாடு சைக்கிளில் சாதனை படைக்கும் காவலர் மோகன்<br>இன்றைய நவீன காலத்தில் சைக்கிளில் பணிக்கு வரும் காவலர் மோகன் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நபராக மாறியிருக்கிறார்.

சைக்கிளில் சாதனை படைக்கும் காவலர் மோகன்
இன்றைய நவீன காலத்தில் சைக்கிளில் பணிக்கு வரும் காவலர் மோகன் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நபராக மாறியிருக்கிறார்.

0
சைக்கிளில் சாதனை படைக்கும் காவலர் மோகன்<br>இன்றைய நவீன காலத்தில் சைக்கிளில் பணிக்கு வரும் காவலர் மோகன் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நபராக மாறியிருக்கிறார்.


அவரிடம் கேட்டபொழுது….. இதனால் என் உடலை சுறுசுறுப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள முடிகிறது‌.
மேலும்
காவல்துறையில் பகல் இரவு என்று அதிகப்படியான நேரம் பணியில் இருக்கும் காரணத்தால் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ள முடியாது இதனால் தான் நிறைய காவலர்கள் பல்வேறு உடல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர்.
ஆனால் நான் ஒரு நாளைக்கு குறைந்தது 30 கிலோ மீட்டர் சைக்கிளில் சுற்றி வேலை செய்வதால் நேரம் தவறி உணவு எடுத்துக் கொண்டாலும் எனக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.
மேலும் காவலர்கள் மன அழுத்தம் சர்க்கரை நோய் முதலான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
ஆனால் இதுநாள் வரை எனக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாததால் என்னால் தினமும் 18 மணி நேரம் கடுமையாக உழைக்க முடிகிறது. எங்கள் பகுதி இளைஞர்கள் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
இதை பார்க்கும் போது நம்மால் முடியவில்லையே என்ற என்னம் என் மனதில் பெரிய ஏக்கமாக இருக்கும்.
இதற்காகவே நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக சைக்கிள் ஓட்டி பணி பார்த்து வருகிறேன்.
இதனால் ஒவ்வொரு நாளும் எனது பணியில் மிகவும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செய்ய முடிகிறது என்று கூறினார்…‌
மேலும் சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு நாள் மோலசூர் கிராமத்தின் அருகே வழியில் செல்போன் பேசிக் கொண்டு சென்ற நபரிடமிருந்து பைக்கில் சென்ற இளைஞர் ஒருவன் செல்போனை பறித்துக்கொண்டு சென்றான்.
இந்த சம்பவத்தை பின்னாலிருந்து கவனித்த நான் எனது சைக்கிளில் துரத்திச் சென்று பைக்கை மடக்கி செல்போன் திருடனை பிடித்தது ஒரு மகிழ்ச்சியான சம்பவம்.
எனது இந்த பணிக்கு நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோரது ஊக்கம் மற்றும் பாராட்டு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று கூறினார்.
கிளியனூர் பகுதியில் சைக்கிளில் சென்ற பணியை பார்த்து வரும் காவலர் மோகன் அவர்களை அந்தப் பகுதி இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்த காலத்திலும் இப்படி ஒரு காவலரா என்று வியப்புடன் பேசிக் கொண்டு உள்ளனர்.
நாமும் அவரது இந்த செயலுக்கு வாழ்த்துவோமாக…. விழுப்புரம் மாவட்ட செய்திகளுக்காக. M. திருமுருகன்
9003323944

ஆம் இன்றைய சூழ்நிலையில் வேலை வெட்டி இல்லாத ஆள் கூட பைக்கில் காரில் சுற்றி ஊர்வலம் வருகின்றனர்
ஆனால் விழுப்புரம் மாவட்டம், வானுர் வட்டம், கிளியனூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் மோகன் அவர்கள் நிலைய பணியையும் நீதிமன்ற பணியையும் பார்த்து வருகிறார்
காவல்துறையில் பணியில் இருந்து கொண்டு நேரம் இல்லாமையால் வீட்டில் கார் மற்றும் பைக் இருந்தும்கூட வாரத்தில் நான்கு நாட்கள் சைக்கிளில் நிலையம் வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here