
அரியலூரில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை அறிந்துகொள்ள பயிற்சி பள்ளி : திருச்சி மண்டல காவல் துறை டி.ஐ.ஜி ஆனி.விஜயா தொடங்கிவைத்தார்.
அரியலூர்
:கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகணங்களில் வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகளை அறிந்துகொள்ள பயிற்சி பள்ளி : திருச்சி மண்டல காவல் துறை டி.ஐ.ஜி ஆனி.விஜயா தொடங்கிவைத்தார்.
அரியலூர் : கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகணங்களில் வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் அரியலூர் அருகேயுள்ள அரசுசிமெண்ட் ஆலைவளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகளை அறிந்துகொள்ளும் பயிற்சி பள்ளியை திருச்சி மண்டல காவல்துறை டி.ஐ.ஜி ஆனி.விஜயா தொடங்கிவைத்தார்.
அரியலூர் அருகேயுள்ள கயர்லபாத் கிராமத்தில் உள்ள அரசுசிமெண்ட் ஆலை வளாகத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியை இன்று திருச்சி மண்டல காவல்துறை டி. ஐ.ஜி. ஆனி.விஜயா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இதனையடுத்து பயிற்சிபள்ளியை சுற்றிப்பார்த்து பயிற்சி விதிமுறைகள், வழங்கப்படும் அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி மண்டல காவல்துறை டி.ஐ.ஜி விஜயா, கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகணங்களில் வேகமாக செல்லும்போது பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் உடல் உறுப்புகள் சேதம் ஏற்படுகின்றது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிமுறைகள், சிக்னல்கள், கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவுறுத்தல் மற்றும் வாகனவிபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு விடியோ உள்ளிட்டவை 10நிமிடங்களுக்கு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த விதிமுறைகளை அனைவரும் பயன்படுத்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் திருச்சி சரகத்திற்குட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60சதவீத காவலர்கள் குனமடைந்துவீடுதிரும்பியுள்ளதாகவும், 40சதவீத காவலர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். தேவையான அளவிற்கு திருச்சி சரகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்கள் மற்றும் பொதுமக்கள் கோரும் இடங்களில் மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், போக்குவரத்து ஆய்வாளர் மதியழகன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் பள்ளி கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.