

ஒரு போன் செய்தால் போதும் 5 நிமிடத்தில் கஞ்சா வீடு தேடி வரும். மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவரி செய்த வாலிபர் கைது – 1.4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக செல்போனில் தொடர்பு கொண்ட உடன் இரு சக்கர வாகனம் மூலம் டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை செய்வதாக நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மேலக்குயில்குடி பகுதியில் ரோந்து சென்று காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அப்பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரன் வயது ( 21) என்பவர் இருசக்கர வாகனம் மூலம் கஞ்சாவை டோர் டெலிவரியாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, சிவனேஸ்வரனை நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனமும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இதுபோன்று கஞ்சா விற்பனை செய்வதால் நல்ல வருமானம் கிடைப்பதால் ஆடம்பரமாக செலவு செய்வதற்காக விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்தான். மேலும், சிவனேஸ்வரனிடம் கஞ்சா எங்கு இருந்து வாங்கபட்டது என்பது குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்