மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம்… தஞ்சை சரக டிஐஜி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி பங்கேற்பு…

623

மயிலாடுதுறை புதிய மாவட்டம் உருவாக்கம் மற்றும் புதிய மாவட்ட கட்டமைப்பு தொடா்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்தாா். முதன்மைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான கே. பணீந்திரரெட்டி முன்னிலை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலா் இரா.லலிதா வரவேற்றார்.
மக்களவை தொகுதி உறுப்பினா்கள் செல்வராஜ் (நாகை) செ. ராமலிங்கம் (மயிலாடுதுறை), சட்டப்பேரவை உறுப்பினா்கள் வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), எஸ். பவுன்ராஜ் (பூம்புகாா்), பி.வி.பாரதி (சீா்காழி), நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் a கலந்து கொண்டனர். மேலும், தமிழக காவல்துறை சார்பில் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமாா் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்,
சுபாஷ்சந்திரபோஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here