Home தமிழ்நாடு மாமுல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை 48 நேரத்தில் சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர்

மாமுல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை 48 நேரத்தில் சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர்

0
மாமுல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை 48 நேரத்தில் சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மன்னிவாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்தி வருபவர் வினோத் கடந்த 3 நாட்களுக்கு மருந்து கடைக்காரர் வினோத் என்பவரை பணம் கேட்டு கொலை மிரட்டி விடுக்கும் சிலம்பரசன் ரவுடி மாமுல் கேட்கும் ஆடியோ வெளியானது.

இந்நிலையில் ஓட்டேரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை ,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன்,கூடுவாஞ்சேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஓட்டேரி காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் 3தனிபடைகள் அமைத்து போலிசார் தேடிவந்தனர்.

போலிசார் தேடிவந்த நிலையில் தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் ஆந்திரா மாநிலம் தப்பி செல்ல முயன்ற நிலையில் மடக்கி பிடித்த போலிசார் 48 மணி நேரத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.அவரிடமிருந்து மூன்று கைபேசி மற்றும் கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிலம்பரசன் மீது 9 வழக்குகள் உள்ளன.பொழிச்சலூர் பகுதியில் இரும்பு வியாபாரியை மாமூல் கேட்டு மிரட்டியதாக சங்கர்நகர் போலீசாரால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 22ம் தேதி வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஓட்டேரியின் பிரபல ரவுடி கைது

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் வண்டலூர் துணை காவல் கண்காணிப்பாளார் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஓட்டேரி காவல் ஆய்வாளர் திரு.பாலாஜி அவர்களின் தனிப்படையில் உதவி ஆய்வாளர் திரு. திலீப் குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.தவமணி மு.நி.கா.திரு.வெங்கடேசன் காவலர்கள் திரு.கலையழகன் திரு.கங்காதரன் திரு.உதயகுமார் திரு.தங்கமணி திரு.ஜெயமாயன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஓட்டேரி கஸ்தூரி மெடிக்கல் ஷாப் வழக்கில் ரவுடியான சிலம்பரசனை தனிப்படையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக கூடுவாஞ்சேரி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கூறுகையில்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ரவுடிகள் இடையூறு செய்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தெரிவிப்பவர் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் ஆகவே பொதுமக்கள் எந்த பிரச்சினை வந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here