அரியலூர் -கத்தியை காட்டி மிரட்டி திருடியது மற்றும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது மாவட்ட ஆட்சியர் ரத்னா நடவடிக்கை.

633

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த முத்தழகன் மகன் கிருஷ்ணமூர்த்தி (40) இவர் மீது திட்டி கத்தியைக் காட்டி கொலை முயற்சி செய்த வழக்கு மற்றும் இதுபோல தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தற்போது அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவபுரத்தில் வசிக்கும் ஆறுமுகம் மகன் அருண்பண்டியன் (30) இவர் சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த வழக்கு மற்றும் டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது என இரண்டு வழக்குகள் உள்ளன.தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here