தூத்துக்குடி மாவட்டம் :01.08.2020
கடந்த 02.07.2020 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகளையில் காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முத்துப்பேச்சி(42), அருண் மகேஷ் (26) ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் பொட்டல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்களான அருணாச்சலம் மகன் முத்துராமலிங்கம்(24), திருவேங்கடம் என்ற அய்யாபிள்ளை மகன் அருணாச்சலம்(34) மற்றும் ஏரல் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் முத்துச்சுடர்(19), ஆகியோரை ஏரல் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
மேற்படி எதிரிகளான முத்துராமலிங்கம் மற்றும் அருணாச்சலம் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பட்டாணி அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பட்டாணி அவர்கள் எதிரிகள் முத்துராமலிங்கம் மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தார்.