
கரோனா காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வந்தாலும் கஞ்சா புழக்கத்துக்கு மட்டும் தட்டுப்பாடு வராத அளவில் இருக்கிறது.கோவை பகுதியில் ஒன்றுக்கு இரண்டு மடங்கு விலையில் கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா பிசினஷினால் போலீஸாரையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது.
கோவை செல்வபுரம் கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து வந்தனர்.இதனை தொடர்ந்து சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் தருண் என்ற இன்பாண்ட் ராஜ்(22), மாரிமுத்து என்ற மாரி ஜோசப் (19)ஆகிய இருவரும் புளியகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், யாசர் முசபத்(25) போத்தனூர் பகுதியை சேர்ந்தவரும், பாபு (19) சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதே பகுதியில் நேற்றைய தினம் இருவரை கைது செய்த நிலையில் இன்றும் மேலும் 4 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். குறிப்பாக
சரவணம்பட்டி பகுதியில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளதால் அவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தெரிகிறது.