
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தத்தனூர் அருகே உள்ள பொட்டகொல்லை கிராமத்தில் கிராம இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இளைஞர்கள் இணைந்து “ஊரே உயிர்”என்ற அமைப்பினை நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பினர் ஊர் கிராம குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வைத்து இன்று மரம் நடும் விழா ஏற்பாடு செய்தனர். இவ்விழாவில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.இந்த “மழலைகளின் கைகளால் வைக்கப்படும் மரங்களால் நாளை அரியலூர் செழுமை ஆகட்டும்” என்று கூறி சிறுவர்களுக்கு மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். மேலும் கிராம அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை இரண்டினையும் இனைத்து “ஊரே உயிர்” அமைப்பினர் நிழற்குடை அமைத்தனர். அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து,பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி தலைவர், ஊரே உயிர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.



