
, நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் இங்குள்ள சாலைகள் அதிக வளைவுகள் ஆகவும் கொண்டை ஊசி வளைவுகள் என உள்ளது, நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தளம் என்பதால் நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கே வந்து செல்வார்கள், இங்கு வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் நீலகிரி மாவட்ட போலீசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நீலகிரி மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் களுக்கு அதிவேகமாக வரும் வாகனங்களை எளிதில் கண்டறியும் நவீன கருவியை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது இக் கருவியின் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வரும் வாகனங்களை கண்டறிந்து இந்த நவீன இயந்திரம் மூலம் அபராதம் விதிக்கப்படும் என்று குன்னூர் போக்குவரத்துகாவல் காவல் ஆய்வாளர் கூறினார்
நீலகிரி மாவட்ட செய்தியாளர் முரளி (குன்னூர்)