கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர்

267

ஊரடங்கு காலத்தில் பல மக்கள் வேலையிழந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். காவல்துறை சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில்¸ கோவை மாவட்டம்¸ கொண்டனூர் கிராமத்தில் காவல்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டு போட்டியினை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. பெரியய்யா.¸ இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் கல்லூரி படிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார். இவ்விழாவில் கோவை சரக காவல் துணை தலைவர் திரு. நரேந்திரன் நாயர்.¸ இ.கா.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருளரசு.¸ இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here