
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (42) என்பவர் திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியில் பீடி மண்டி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த இளங்கோ, சிவகுமார், சங்கர், கரிகாலன் உள்ளிட்ட பெயர் விலாசம் தெரியாத நபர்கள் ஆறுமுகத்திற்கு சொந்தமான பீடி கம்பெனியில் அத்துமீறி நுழைந்து அங்கு பணியில் இருந்த வேலை ஆட்களை தரக்குறைவாக பேசி கத்தியை காட்டி மிரட்டி மண்டியிலிருந்த பீடி பாக்ஸ்கள், லேபிள், பீடி அட்டம், பண்டல்கள், பேக்கிங் மிஷின் உள்ளிட்ட 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்து சென்றதாக திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.