
நெல்லை மாவட்டம் பணகுடியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி கோயில் விளையைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள டூவீலர் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் பக்கத்து தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர், மாணிக்கராஜ் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த இளைஞரை கைது செய்து, போக்சோ சட்டத்த்ன் கீழ் சிறையில் அடைத்தனர்.