அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்கள் எவ்வாறு கையாளுவது குறித்தும், காவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்தும் ஒரு நாள் “ஆன்லைன் பயிற்சி ” ( Online Training) பயிற்சியை இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட காவல் துறைகண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். உடன் காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி (அரியலூர்)பங்கேற்றார். இதேப்போல் தத்தனூர் அருகே உள்ள மீனாட்சி ராமசாமி கல்லூரி வளாகத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி தொடங்கி வைத்தார். உடன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் (ஜெயங்கொண்டம்) பங்கேற்றார்.


இப்பயிற்சி கருத்தரங்கில் சென்னை மன நல மருத்துவர்கள் டாக்டர் கண்ணன், டாக்டர் . சித்ரா அரவிந்தன், ஓய்வு பெற்ற காவல் துறைகண்காணிப்பாளர் சித்தனாதன், ஓய்வு பெற்ற காவல்துறைகண்காணிப்பாளர் கருணாநிதி, ஓய்வு பெற்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பரந்தாமன், சென்னை போலீஸ் அகாடமயின் (TNPA) துணை கண்காணிப்பாளர் லெட்சுமி காந்தன், அண்ணாமலை பல்கலைக்கழகஉதவிபேராசிரியர்.நாகராஜன், ஆத்மரஞ்சன் யோகவித்யாலயா பிரகாஷ், சென்னை மனவளக்கலை மன்ற சிவக்குமார், பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ரவி சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்று பயிற்சி கருத்தரங்கம் வகுப்புநடத்தினர்.இப்பயிற்சியானது,அரியலூர்மாவட்டகாவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல்கூடுதல்காவல்கண்காணிப்பாளர்கள் வரை உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில் நடைபெறும் என மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளV.R.ஸ்ரீனிவாசன்தெரிவித்தார்.
