காவல்துறையினருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி வகுப்புகள் …..

169

மதுரை மாவட்டம்
03.08.2020

மதுரை மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு சுழற்சிமுறையில் “மன அழுத்த மேலாண்மை” பயிற்சி வகுப்புகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி வகுப்புகளில் காவல்துறையினருக்கு பணி எவ்வாறு சிறப்பாக மேற்கொள்வது குறித்தும், கொரோனா தொற்றில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்தும், காவலர்கள் தங்கள் உடல் வலிமையை மேம்படுத்தும் உடற்பயிற்சிகள் குறித்தும், பொதுமக்களிடம் காவலர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்வது குறித்தும் பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டது……செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here