Home COVID-19 நாமக்கல் மாவட்டக் காவல் துறையினருக்கு இனைய வழி மன அழுத்த மேலாண்மை பயிற்சி துவக்கம்

நாமக்கல் மாவட்டக் காவல் துறையினருக்கு இனைய வழி மன அழுத்த மேலாண்மை பயிற்சி துவக்கம்

0
நாமக்கல் மாவட்டக் காவல் துறையினருக்கு இனைய வழி மன அழுத்த மேலாண்மை பயிற்சி துவக்கம்

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள் தமிழகம் முழுவதும் காவல் துறையில் பணிபுரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முதல் காவலர்கள் வரை உள்ளவர்களுக்கு கோவிட் 19 தொற்று நோயை எதிர்கொள்ளும் மன அழுத்த மேலாண்மை தொடர்பான ஒரு நாள் இணைய வழி பயிற்சி அளிக்க அறிவுரை வழங்கியதின் பேரில் இன்று 03.08.2020 ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. சி.சக்தி கணேசன் இ.கா.ப அவர்கள் திருச்செங்கோடு எளையம்பாளையம் விவேகானந்தா கல்லூரியில் இன்று காலை 09:00 மணிக்கு பயிற்சியை இனிதே துவங்கி வைத்து கடந்த ஆறு மாத காலமாக கொரோனாவுக்கு எதிரான போரில் திறம்பட பணியாற்றியமைக்கு பாராட்டியும் இனி வரும் காலங்களிலும் சிறப்பாக பணிபுரிய அறிவுரையும் வழங்கினார்.


மேலும் வேலூர் உட்கோட்ட காவலர்களுக்கு கந்தசாமி கண்டர் கல்லூரியில் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி சுஜாதா அவர்களும், ராசிபுரம் உட்கோட்ட காவலர்களுக்கு காக்காவேரி முத்தையாம்மாள் நினைவு கல்லூரியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராமு அவர்களும், நாமக்கல் உட்கோட்ட காவலர்களுக்கு செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ரவிக்குமார் அவர்களும் கொரோனாவுக்கு எதிரான மன அழுத்த மேலாண்மை பயிற்சி வகுப்புகள் இனிதே துவங்கி வைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் இப்பயிற்சியில் பங்குபெற்று மன அழுத்தத்தை எதிர்கொள்ள கையாளும் வழிமுறைகளை தெரிந்து பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சி.சக்தி கணேசன் இ.கா.ப அவர்கள்; அறிவுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here