புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததோடு ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய
26 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

650

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த
15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியை அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவுக்கார இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாத கூறப்படுகிறது.
மேலும் அந்த சிறுமியுடன் தனிமையில் இருந்த போது செல்போனில் எடுக்கப்பட்ட ஆபாச படங்களை சிறுமியின் தாயிடம் காட்டி அந்த சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன்(26)என்ற இளைஞரை கைது செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் மூன்று நாட்கள் குற்றவாளியை நீதிமன்ற காவலில் எடுத்து உள்ள போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதோடு அவர் எடுத்த ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் ஏதேனும் பரப்பினர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட வரும் நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வையும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here