கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பும் காவல் ஆளிநர்களுக்கு மலர் தூவி , இசை முழக்கத்துடன் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் வரவேற்பு. மாவட்டகாவல்துறைகண்காணிப்பாளர்,V.R. ஸ்ரீனிவாசன் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்

220

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டம், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் (தா.பழூர்),தலைமை காவலர் கீதா (தா.பழூர்) மற்றும்முதல்நிலை காவலர் உஷாராணி(அனைத்து மகளிர் காவல் நிலையம் ,ஜெயங்கொண்டம்.)
ஆகியோர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தனர். அதனையடுத்து மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அம்மூவரும் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்ற நிலையில், குணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மலர்தூவி இசை முழக்கத்துடன்காவல்துறையினர்வரவேற்பு அளிக்கதனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் பூங்கொத்து, பழக்கூடை கொடுத்து வரவேற்றார். மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர்மணவாளன் (ஆயுதப்படை) மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here