
எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானங்கள் வீடு தேடி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 235 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் பகுதியிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து உணவு டெலிவரி செய்வது போல மதுபாட்டிகளை விற்பனை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.