Home தமிழ்நாடு பணம், செல்போனை
கொடுக்க மறுத்த
வாலிபர் சரமாரி
வெட்டி சாய்ப்பு.!மயிலாப்பூரில்
வழிப்பறி கொள்ளையர்
அட்டூழியம்.

பணம், செல்போனை
கொடுக்க மறுத்த
வாலிபர் சரமாரி
வெட்டி சாய்ப்பு.!மயிலாப்பூரில்
வழிப்பறி கொள்ளையர்
அட்டூழியம்.

0
பணம், செல்போனை
கொடுக்க மறுத்த
வாலிபர் சரமாரி
வெட்டி சாய்ப்பு.!மயிலாப்பூரில்
வழிப்பறி கொள்ளையர்
அட்டூழியம்.

மயிலாப்பூரில்
வழிப்பறி கொள்ளையர்
அட்டூழியம்.

கொடூர கும்பலை
போலீஸ் தேடுகிறது.!!

சென்னை
ஆக 4

மயிலாப்பூர் ,நொச்சி நகரில் வசிப்பவர் அஜய் (வயது 22) மயிலாப்பூர் அப்புதெருவில் தனியார் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இவருடைய பாட்டி வீடு சாந்தோமில் உள்ளது.

நேற்று இரவு ஏழு மணியளவில், பணி முடிந்த பிறகு நொச்சி நகரில் உள்ள தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

சாந்தோம் சர்ச் பின்புறம் சென்றபோது, வழிப்பறி கொள்ளை கும்பல் வழிமறித்தது., இதில் நான்குபேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

அஜய் நேற்றுதான் சம்பளம் வாங்கியிருந்தார். நல்ல வேளையாக சம்பளப் பணத்தை வங்கியில் போட்டு விட்டு, கை செலவுக்காக 500 ரூபாய் மட்டும் பர்ஸ்- ல் வைத்திருந்தார்.

வழிப்பறி கும்பல் முதலில் அதை பிடுங்கிக் கொண்டது. அடுத்து செல் போனை பறிக்க முற்பட்டனர். இவர் அதைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளவே, அக்கொடூர கும்பம் இவருடைய இரு கைகளையும் சரமாரியாக வெட்டியது. அவர் தலையிலும் வெட்டுகள் விழுந்தது.

அஜய் அலறி கூச்சல் போட்டபடி அங்கேயே ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். இவருடைய சத்தம் கேட்டு தூரத்தில் சென்று கொண்டிருந்த சிலர் விரைந்து வரத்தொடங்கினர்.

இதைப் பார்த்த அந்த கும்பல் கத்திகளுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த அஜயை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கொடூர வழிப்பறி கும்பலைத் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here