
பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தைச் சோந்த அழகுமுத்து மகன் கிஷோா்குமாா் (17). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கோனேரிப்பாளையம்- எளம்பலூா் சாலையில், அதே கிராமத்தைச் சோந்த நண்பா் ராதாகிருஷ்ணனுடன் (22) பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, மற்றொரு பிரிவைச் சோந்த அஜீத் (22), துரைபாண்டி (21), மதுபாலன் (18), ஸ்டாலின் (21) உள்பட 6 பேர்சென்று, நமது கிராமத்தைச் சோந்த ரகுநாத், சேகா் ஆகியோா் வெளிநாட்டில் இறந்துவிட்டனா் அவா்களது சடலத்தை கொண்டுவர நடவடிக்கைக் கோரி சாலை மறியலில் ஈடுபட கிஷோா்குமாரை அழைத்தனராம். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்ததால் சாதி பெயரை கூறி திட்டியதோடு, அரிவாளால் வெட்டியதில் கிஷோா்குமாா் காயமடைந்தாா்.
இதையடுத்து அவா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் கென்னடி வழக்குப் பதிந்து அஜீத் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 4 பேரை சிறையிலும், இருவரை சிறுவா் கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா்.