கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் – கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி

445

கர்நாடகாவில் உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை அம்மாநில அரசு பணி இடமாற்றம் செய்துள்ளது.

அதன்படி, ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை ஏற்கும் முதல் பெண் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக ரூபா இருந்தபோது, சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக சர்ச்சையை எழுப்பி இருந்தார்.

இதற்கிடையே, கர்நாடக மாநில உள்துறை செயலாளராக இருந்த உமேஷ் குமார், பொருளாதார குற்றப் புலனாய்வு துறையின் ஏ.டி.ஜி.பி.யாக பணிஇட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here