Home தமிழ்நாடு சேதுபாவாசத்திரம் அருகே உலோக சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது

சேதுபாவாசத்திரம் அருகே உலோக சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது

0
சேதுபாவாசத்திரம் அருகே உலோக சிலைகளை விற்க முயன்ற 3 பேர் கைது

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புக்கரம்பை கிராம நிர்வாக அதிகாரி இந்திராகுமாரி மற்றும் அதிகாரிகள் ஆடிப்பெருக்கையொட்டி கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் கரூர் மாவட்டம் குளித்தலை கோப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆண்டிசாமி(வயது 36) என்பவர் புக்கரம்பையை சேர்ந்த சரவணன்(37), பிரான்மலை(36) ஆகியோருடன் தங்கி இருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆண்டிசாமி, சரவணன், பிரான்மலை ஆகிய 3 பேரும் சேர்ந்து வேறு பகுதியில் திருடப்பட்ட உலோகத்தால் ஆன 2 சாமி சிலைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தனிப்படை போலீசார் 3 பேரையும் பிடித்து அவர்களிடம் இருந்த அனுமன் மற்றும் நாராயணி அம்மன் ஆகிய 2 உலோக சிலைகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டிசாமி, சரவணன், பிரான்மலை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சிலைகள் எங்கிருந்து திருடப்பட்டது? கோவிலுக்கு சொந்தமான சிலைகளா? எந்த வகையான உலோகத்தால் ஆனது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here