
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் அரசு சிமெண்ட் ஆலை வளாகத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இயக்கிவரும் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர்
V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின் படி இன்று கயர்லாபாத் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி குறும்படம் காட்டி, சாலை பாதுகாப்பு, ஹெல்மெட் அணிவதின் அவசியம்,மற்றும் நான்கு சக்கர வாகனம் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது அவசியம் குறித்து அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
