சைல்டு லைன் சார்பில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது.

403

சைல்டு லைன் சார்பில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் மணியகரன்பட்டி கொண்டமநாயக்கன்பட்டி ராஜகோபாலன் தொட்டி ஆகிய ஊர்களில் சைல்டு லைன் சார்பில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் சங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை ஆர்வலர் திருமதி.சண்முகவடிவு ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அவர்கள் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் ஆய்வாளர் திருமதி.உஷா அவர்கள் சார்பு ஆய்வாளர் திருமிகு.ரதி காலா,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சத்யநாராயணா கிபி விஜி இயக்குனர் திருமிகு.இப்ராஹிம் சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.மஞ்சு சைல்டு லைன் துணை மைய ஒருங்கிணைப்பாளர் தவராஜ்,யுனிசெப் ஒருங்கிணைப்பாளர் திருமதி.சாந்தி மற்றும் கிபி விஜி பணியாளர்கள் சைல்டு லைன் அணி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த நிகழ்வுகளை நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி வாயிலாக AHMT பணியாளர்கள் செய்து காட்டினர்.இதில் கிராம பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here