
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்ளும் இன்று 07.08.2020-ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை முகக்கவசம் அணியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த சுமார் 200 பொதுமக்களை 13 இடங்களில் நிறுத்தி வைத்து கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக முகக்கவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், கையுறை அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் அவசியமின்றி வெளியில் சுற்றி திரியக்கூடாது போன்ற அறிவுரைகள் நான்கு சக்கர வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக நாமக்கல் மாவட்ட காவல் துறையினரால் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவுதல் தடுத்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் விதிமுறைகளை கடைபிடித்து தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியும், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.சக்தி கணேசன், இ.கா.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.