Home தமிழ்நாடு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்

0
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே 15 கிலோ கஞ்சா பிடிபட்டது கத்தியுடன் மூவர் கைது இருவர் தப்பி ஓட்டம்

சோழவந்தான்  பகுதியில் கஞ்சா  விற்பனையாகி வருவதாகவும் இதனால்  சிறார்கள் சீரழிந்து வருவதாக  இப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர் இதன்பேரில் போலீசார்  நடவடிக்கை எடுத்து வந்தனர் சோழவந்தான் பகுதிஅருகே  கஞ்சா மொத்தமாக விற்பனை பரிமாற்றம் நடப்பதாக  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது இதன்பேரில் சோழவந்தான் பகுதியில் போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினர் திருவேடகம் புதுப்பாலம் டாஸ்மார்க் கடை முன்பாக கஞ்சா மொத்தமாக விற்பனை பரிமாற்றம் செய்தபோது சோழவந்தான் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர் இதில் அவர்களிடமிருந்து கத்தி சுமார் 15 கிலோ கஞ்சா மோட்டர் சைக்கிள் ரொக்கம் சுமார் இரண்டாயிரம் ரூபாய் போலீசார் கைப்பற்றினர் இதில் மணிவண்ணன் ஆனந்த் பாண்டி கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர் .செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here