Home தமிழ்நாடு வேலூர் அருகே நூதன மோசடி செய்த நபர்களை கைது செய்து போலிசார் விசாரணை

வேலூர் அருகே நூதன மோசடி செய்த நபர்களை கைது செய்து போலிசார் விசாரணை

0
வேலூர் அருகே நூதன மோசடி செய்த நபர்களை கைது செய்து போலிசார் விசாரணை

வேலூர் மாவட்ட செய்தியாளர் டேவிட்

அங்கு அலுவலகம் திறந்து கணினி பேட்டரி மூலம் இயங்கவும் காலையில் வீட்டின் உரிமையாளரே கணினியை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் கூறி அதற்காக மாதம் 6 ஆயிரம் வாடகையை கொடுத்துள்ளார்.

ஏடிஎம் பின் நம்பர் மூலம் நாடுமுழுவதும் கொள்ளையடிக்கும் கும்பலின் வேலூர் அலுவலகத்தில் இருந்த கணினி லேப்டாப் மற்றும் பொருட்கள் பறிமுதல் திருச்சியில் பிடிபட்ட நபர்கள் மூலம் இங்கு அலுவலகம் இருப்பதை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை வேலூர்மாவட்டம்,வேலூர் சஞ்சீவி பிள்ளை தெருவில் ஒரு சிறிய சந்தினுள் பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு நபர் வீடு வாடகைக்கு எடுத்து ஒரு அறையில் கணினி விற்பனை செய்யும் முகவர் என்று கூறி அங்கு அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார் .

திருச்சியில் இந்த கும்பல் சேர்ந்த ஒருவன் நேற்று சிக்கியுள்ளான்.

இவர்களின் வேலை நாட்டில் பல இடங்களில் இது போன்ற அலுவலகங்களை திறந்து கணினிகளை வைத்து வங்கியின் மேலாளர் பேசுவதாக கூறி அவர்களின் செல்போனிற்கு வரும் ஓடிபி நம்பரை பெற்று பணத்தை அவர்களுக்கு தெரியாமல் திருடி வந்துள்ளனர்.

இதற்காக ஆங்காங்கே உள்ள அலுவலகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது இதன் மூலம் போலீசார் இவர்களை கண்டுபிடித்து மிகவும் சிரமம் ஒரு இடத்தில் பணத்தை எடுத்தால் வேறு இடம் போல் காட்டும் இப்படி திருடி வந்த கும்பலில் திருச்சியில் ஒருவன் சிக்கியதில் கொடுத்த தகவலின் பேரில் வேலூரில் செயல்பட்டு அலுவலகத்தை சோதனை செய்தனர். அதில் கணினி லேப்டாப் இரண்டு இன்வர்டர் பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பல் நாடு முழுவதும் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here