Home தமிழ்நாடு கும்பகோணத்தில் ஆசையாய் வளர்த்த பூனையை அடித்துக் கொன்ற 20 வயது வாலிபர கைது

கும்பகோணத்தில் ஆசையாய் வளர்த்த பூனையை அடித்துக் கொன்ற 20 வயது வாலிபர கைது

0
கும்பகோணத்தில் ஆசையாய் வளர்த்த பூனையை அடித்துக் கொன்ற 20 வயது வாலிபர கைது

கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை நாச்சியார்கோவில் மெயின் ரோட்டில் குத்புதீன் மகன் பஷீர் அகமது என்பவர் வசித்துவருகிறார் இவர் ஆசையாக ஒரு வயதான பூனை ஒன்று வளர்த்து வந்தார் அதற்கு பட்டுக்குட்டி என்று பெயர் வைத்துள்ளர்
பசீர் அகமது வளர்த்து வந்த பூனை அவரது காம்பவுண்ட் சுவற்றில் உட்கார்ந்திருந்த போது அவ்வழியே சென்ற சுவாமிமலை அருகே உள்ள பட்டவர்த்தி மெயின் ரோடு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வீரமணி துப்புரவு பணியாளர் என்பவர் மதில் மேல் உட்கார்ந்திருந்த பூனையை கல்லால் அடித்துள்ளார் பூனை மண்டைப் பகுதியில் பலமாக அடிபட்டதால் அந்த இடத்திலேயே உயிரிழந்தது இதனை பார்த்தது பசீர் அகமது கல்லால் அடித்து பூனையைக் கொன்ற வீரமணி மீது நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் அளித்ததன் பேரில் வீரமணியின் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து காவல்துறையினர் வீரமணியை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here