Home தமிழ்நாடு சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மனைவி காவல் ஆணையரிடம் மனு

சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மனைவி காவல் ஆணையரிடம் மனு

0
சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் பால்துரை மனைவி காவல் ஆணையரிடம் மனு

சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால்துரையின் மனைவி, மருத்துவ சிகிச்சையில் உள்ள தனது கணவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரி இன்று மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தற்போது நீதிமன்ற காவலில் உள்ள உதவி ஆய்வாளர் பால் துரை, கரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து தனது கணவரை மாற்றம் செய்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வலியுறுத்தி மதுரை காவல்துறை ஆணையரிடம் இன்று மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதுமான வசதிகள் இன்றி எனது கணவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு சர்க்கரை ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருக்கின்றன. இதனால் அவர் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து நேரும் அபாய நிலையில் உள்ளார்.

ஆகையால் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலையிட்டு அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here