
தூத்துக்குடி மாவட்டம் :08.08.2020


இதற்கான ஏற்பாடுகளை ஏகம் என்ற அமைப்பு சார்பாக செய்திருந்தனர். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன் மற்றும் திரு. கோபி, தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேஷ், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ், தூத்துக்குடி போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் உள்ள தூத்துக்குடி மாநகரம், தூத்துக்குடி ஊரகம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, மணியாச்சி ஆகிய 8 உட்கோட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினர் உட்பட அனைத்து காவல்துறையினருக்கும் 12000 முகக் கவசங்கள், 1800 கிருமி நாசினி பாட்டில்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு 50 பைபர் முகத்திரைகள் ஆகியவற்றை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு ஒவ்வொரு உட்கோட்ட வாரியாக அனைத்து உட்கோட்ட காவல்துறையினருக்கும் இன்று (08.08.2020) மாவட்ட காவல்துறை அலுவலக வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.