Home தமிழ்நாடு தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக் நகரில் திருடுபோன சுமார் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக் நகரில் திருடுபோன சுமார் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைத்தார்.

0
தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக் நகரில் திருடுபோன சுமார் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான 40 சவரன் தங்க நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் :08.08.2020

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை சகாயம் மகன் வின்ஸ்டன் அந்தோணி சேவியர் (வயது 31), ஸ்பிக் ஆலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் தனது குடும்பத்துடன் ஸ்பிக் குடியிருப்பில் “சி” பிளாக்கில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் 26.03.2020 அன்று மாலை வின்ஸ்டன் அந்தோணி சேவியர் தனது மனைவி ஜேசு சகாயம் மோனிகாவுடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். வீட்டை பூட்டியவர் சாவியை, அங்கேயே எங்கோ ஒரு இடத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்.

சென்றவர்கள் மறுநாள் மாலை வீடு திரும்பியபோது சாவி இல்லாததால், இன்னொரு சாவியை வைத்து திறந்து வீட்டிலிருந்துள்ளார். அதன் பின்னரே வீட்டிலிருந்த சுமார் 40 பவுன் நகைகள் களவு போயுள்ளது தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே 28.03.2020 அன்று வின்ஸ்டன் அந்தோணி சேவியர் நகைகள் காணாமல் போனது குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முத்தையாபுரம் போலீசாருக்கு, வின்ஸ்டன் அந்தோணி சேவியரின் வீட்டிற்கு எதிர்வீட்டிலிருந்த மேற்கு வங்காளம், பார்புரா மாவட்டம், பிரபானி கிராமத்தைச் சேர்ந்த திரிபங்கா மகந்தா என்பவரது மகன் சிரன்ஜித் மகந்தா( வயது 26) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அதனால் போலீசார் அவரை துருவி, துருவி விசாரணை செய்தததில், அவர்தான் அந்த நகைகளை திருடியதும், அந்த நகைகளை ஒரு பாலித்தீன் பையில் போட்டு வீட்டுக்கு வெளிப்புறம் தண்ணீர் வெளியே செல்லும் குழாயினுள் ஒளித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, அவரையும் 29.03.2020 அன்று கைது செய்து, அவர் ஒளித்து வைத்திருந்த புகார்தாரரின் அனைத்து நகைகளையும் மீட்டு, அவரை சிறையிலடைத்தனர்.

திருடுபோன நகைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை 3 பவுன் எடையுள்ள நெக்லஸ் ஒன்று, 3½ பவுன் செயின் ஒன்று, 3½ பவுன் சிறிய மாலை ஒன்று, 4 பவுன் மற்றும் 5 பவுன் பெரிய மாலை இரண்டு, 7½ பவுன் 5 வளையல்கள், 3½ பவுன் காப்பு ஒன்று, 1 பவுன் மற்றும் 3 பவுன் கைச்செயின் இரண்டு, 1 பவுன் மற்றும் ¾ பவுன் கம்மல் ஜோடிகள் இரண்டு, ¼ மற்றும் ½ பவுன் காது மாட்டி ஜோடிகள் இரண்டு மற்றும் 3 பவுன் எடையுள்ள ஏழு மோதிரங்கள் ஆகியவையாகும்.

இன்று (08.08.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மேற்படி திருடு போன சுமார் 40 பவுன் நகைகளையும், அதன் உரிமையாளரான வின்ஸ்டன் அந்தோணி சேவியரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஒப்படைத்தார். மேலும் அவரிடம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். வின்ஸ்டன் அந்தோணி சேவியர் அவரது மனைவி ஜேசு சகாய மோனிகா மற்றும் அவரது தாயார் சகாய கனிஷ்டா அவரது தந்தை அந்தோணி அமல்ராஜ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

இவ்வழக்கில் விவேகமாகவும், விரைந்தும் செயல்பட்டதால், எதிரி கண்டு பிடிக்கப்பட்டு, நகைகள் அப்படியே அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுளளது என்று கூறி, முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் மற்றும் முத்தையாபுரம் போலீசாiர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன் மற்றும் திரு. கோபி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here