நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உதவும் காவல் உதவி ஆய்வாளரை பாராட்டும் பொதுமக்கள்

326

அரியலூர் மாவட்டம் ‌, காவல் ரோந்து வாகன எண் 1ல் பணியாற்றும் உதவி ஆய்வாளர் திருமேனி நெடுஞ்சாலையில் பழுதாகி மற்றும் பஞ்சர் ஆகிய நிற்கும் வாகனங்களை தனியார் நடமாடும் பழுது நீக்கம் செய்பவர்களின் உதவியுடன் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு உதவி வருகிறார். ஒரு வாகனம் பழுது காரணமாக சாலையில் அதிக நேரம் நிற்கும் பொழுது போக்குவரத்து நெரிசல் அல்லது குற்ற சம்பவம் நிகழ வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழாத வண்ணம் அரியலூர் மாவட்ட காவல்துறை செயல்பட்டு வருகிறது. மேலும் நெடுஞ்சாலைகளில் இம்மாதிரி உதவியை பெற்ற வழிப்போக்கர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அரியலூர் மாவட்ட காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here