வெடிமருந்து மற்றும் உரக்கடை உரிமையாளர்கள் முன்னெச்
சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் செயல்பட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படிமாவட்டகாவல்துறையினர் அறிவுரை கூட்டங்கள் நடத்தினர்.

349

அரியலூர் மாவட்டம்,
மாவட்டகாவல்கண்காணிப்பாளர்
V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள வெடி மருந்து கடை மற்றும் உரக்கடை உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் அறிவுரை கூட்டங்கள் இன்று ஏற்பாடு செய்தனர்.
இவ்ஆலோசனைகூட்டங்கள் அரியலூரில் ,அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி தலைமையிலும், ஜெயங்கொண்டம் நகரில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமையிலும், மற்றும் திருமானூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் தலைமையிலும் நடைபெற்றன.
இக்கூட்டத்தில் உரிமையாளர்கள் தங்களது கடைகளின் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அதிகமாக வைத்திருக்கக் கூடாது.விற்பனை செய்யும் பொருட்களை ஒரே நபருக்கு அதிக அளவில் விற்கக் கூடாது. தீப்பற்றக்கூடிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.வெடிபொருட்களை மிகப் பாதுகாப்பானமுறையில் கையாளவேண்டும்போன்றஅறிவுரைகளை காவல்துறையினரால் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here