

இளம்பெண்களின் புகைப்படங்களை புரோக்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸப் மூலம் அனுப்பி வைப்பதாகவும், பெண்கள் 4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
