காஞ்சிபுரத்தில் ATM ல் கேட்பாரற்று கிடந்த ரூ.10,000த்தை மாவட்ட எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞர்- எஸ்.பி.சண்முகபிரியா பாராட்டு–

162

காஞ்சிபுரம்,ஆக.10: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவர் கடந்த 1-8-2020 அன்று கீழம்பியிலுள்ள SBI ATM ல் பணம் எடுக்க சென்ற போது அந்த ATM ல் கேட்பாரற்று இருந்த ரூ.10,000த்தை அன்றே காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியாவிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி.உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேற்படி பணமானது கீழம்பியை சேர்ந்த வரதராஜன் என்பவருடையது என தெரியவரவே அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 4-8-2020 அன்று மாவட்ட எஸ்.பி.சண்முகப்பிரியா வரதராஜனிடம் நேரடியாக ஒப்படைத்தார். அப்போது SBI வங்கி அதிகாரி உடனிருந்தார். மேற்படி பணத்தை ஒப்படைத்த பிரபுதாஸை நேர்மையாக நடந்து கொண்ட காரணத்தை கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.சண்முகப்பிரியா வெகுவாக பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here