
கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் இச்சூழ்நிலையில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அனைத்து மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய மானூர் காவல் நிலைய போலீசாரை ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.அர்ச்சனா அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்சியில் உதவி ஆய்வாளர்கள் திரு.கணேஷ் குமார், திரு.செய்யது நிசார் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.