RED ALERT – தேனி மாவட்டம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டத்திற்கு RED ALERT விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப்பெரியாறு ஆற்றுப் பகுதியின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் நேரில் சந்தித்து ஆற்றுப் பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ ஆற்றுப்பக்கம் செல்ல வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கினார்.
மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா நோய் தோற்று வராமல் இருக்க பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு வழங்கினார்.