குமரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
குமரிமாவட்டம் நாகர்கோவில் வடசேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கிருஷ்ணன் கோவில் பகுதிக்கு சென்றனர்.அங்கு சட்ட விரோதமாக இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவரவே அவர்களை விசாரித்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த ஊசி மணிகண்டன்,சதீஷ் பாபு,சிவக்குமார் என்ற மூன்று பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீசார் கஞ்சா எங்கிருந்து வாங்கப்படுகிறது எங்கே கொண்டு விற்பனை செய்யப்படுகிறது என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல் வடசேரி,கோட்டார், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.